Latestமலேசியா

கோலாலம்பூரில் 11 ஏடிஸ் கொசு இனப்பெருக்க இடங்கள் கண்டுபிடிப்பு – கட்டுமானத் தளம் மூடல்

கோலாலம்பூர், அக்டோபர் 30 – கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (DBKL) மேற்கொண்ட ஏடிஸ் கொசு ஒழிப்பு நடவடிக்கையின்போது, செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இரண்டு கட்டுமானத் தளங்களில் 11 கொசுப் புழு இனப்பெருக்க இடங்கள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து, 1975ஆம் ஆண்டு நோயைப் பரப்பும் பூச்சிகளை ஒழிக்கும் சட்டத்தின்கீழ் 11 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டதுடன், அதிகளவில் கொசு இனப்பெருக்க இடங்கள் கண்டறியப்பட்ட ஒரு கட்டுமானத் தளமும் மூடப்பட்டது.

இந்த நடவடிக்கையில், மொத்தம் 910 தொழிலாளர்கள் பணியாற்றும் இரண்டு கட்டுமானத் தளங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றின் கட்டுமானப் பணிகள் 63 முதல் 86.33 விழுக்காடு வரை நிறைவடைந்துள்ளன.

கட்டுமானத் தளங்களைத் தூய்மையாக வைத்திருப்பதுடன், நீர் தேங்கக்கூடிய கொள்கலன்களை அகற்றி, முறையான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு DBKL வலியுறுத்தியுள்ளது. டெங்கு பரவலைத் தடுக்க அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!