
கோலாலாம்பூர், ஜனவரி-9 – ஆறாண்டுகளுக்கு முன், கோலாலாம்பூர் ஸ்தாப்பாக்கில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியிலிருந்து, தனது 4 வயது பேரப் பிள்ளையை தூக்கி எறிந்து அது உயிரிழக்கக் காரணமான நைஜீரிய ஆடவருக்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
48 வயது Ibekwe Emeka Augustine-னுக்கு, கோலாலாம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி அத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.
2020 நவம்பர் 29-ஆம் தேதி காலை காலை 7.45 மணி முதல் 8.15 மணி வரை Danau Villa அடுக்குமாடி வீட்டில் அக்குற்றங்களைப் புரிந்ததாக அகஸ்டின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மாற்றான் பிள்ளைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, சொந்த மகனை கொல்ல முயன்றது, மனைவியைக் காயப்படுத்தியது, தற்கொலைக்கு முயன்றது ஆகிய இதர 4 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியே என தீர்ப்பளிக்கப்பட்டார்.
அக்குற்றங்களுக்கு, ஏக காலத்தில் அனுபவிக்கப்பட ஏதுவாக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
போதைப்பொருள் மயக்கத்தில் ஒரே நாளில் அத்தனைக் கொடூரங்களைப் புரிந்ததை ஏற்றுக் கொள்ளவோ மன்னிக்கவோ முடியாது என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.



