கோத்தா பெலூட், செப்டம்பர் -7 – சபா கோத்தா பெலூட்டில், கழிவறைக் குழியில் கால் மாட்டிக் கொண்டு 6 வயது சிறுவன் 2 மணி நேரங்களாக வலியில் துடித்திருக்கிறான்.
நேற்று காலை அங்குள்ள Tabika Kemas பாலர் பள்ளியில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவ இடத்தை வந்தடைந்த 8 பேரடங்கிய தீயணைப்பு-மீட்புப் படை, ‘paratech tool’ எனும் சிறப்புக் கருவியின் உதவியுடன் சிறுவனின் காலை வெளியே எடுத்தது.
அவனுக்கு மருத்துவக் குழு தொடக்கக் கட்ட சிகிச்சைகளை வழங்கியது.
காலில் சிறிய காயங்கள் ஏற்பட்டிருந்ததால், அம்புலன்ஸ் வண்டியில் அவன் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டான்.
சம்பவ இடத்தில் வேறு ஆபத்தேதும் இல்லையென உறுதிச் செய்யபட்டதும், நண்பகல் வாக்கில் மீட்புப் பணிகள் நிறைவுப் பெற்றன.