
சிப்பித்தாங், ஜூலை-13 – சபா, சிப்பித்தாங்கில் வேட்டையாடச் சென்றபோது நண்பரைத் தவறுதலாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, பயத்தில் அவரது உடலை அழுகும் வரை புதரில் மறைத்து வைத்திருந்த இருவரை போலீசார் கைதுச் செய்துள்ளனர்.
50 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள், தங்கள் நண்பருடன் வேட்டையாடச் சென்றபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அப்போது எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கி வெடித்ததில் நண்பர் உயிரிழந்துள்ளார்.
தவறை மறைப்பதற்காகப் பலியானவரின் உடலை அவர்கள் புதருக்குள் வீசிச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் உடல் கண்டெடுக்கப்பட்டு, இருவரும் கைதுச் செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தை அடுத்து, அவர்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்திய ‘பகாகுக்’ (Bakakuk) வகை நாட்டுத் துப்பாக்கிகள் இரண்டையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவியல் சட்டத்தின் கீழ் போலீஸார் மேல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.



