Latestமலேசியா

சம்பல் இல்லாத நாசி லெமாக் 5 ரிங்கிட் 90 சென்னா? உணவகத்தை ‘விளாசிய’ Chef Zam

கோலாலம்பூர், ஆகஸ்ட்-21 – சம்பல் இல்லாத நாசி லெமாக்கை 5 ரிங்கிட் 90 காசுக்கு விற்பதா என பிரபல உள்ளூர் சமையல் கலைஞர் Chef Zam கேள்வி எழுப்பியுள்ளார்.

சிலாங்கூர், சுபாங்கில் உள்ள பிரபல உணவகமொன்றில் தனக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தை டிக் டோக்கில் அவர் பகிர்ந்தார்.

கோழி ரெண்டாங்குடன் (chicken rendang) நாசி லெமாக்கை அவர் ஆர்டர் செய்தார்; அதில் ரெண்டாங்கின் விலை மட்டும் 4 ரிங்கிட் 90 சென்.

ஆனால், வெறும் 6 சிறிய துண்டுகளே அதிலிருந்தது கண்டு Chef Zam ஏமாற்றமடைந்தார்.

சம்பல் இல்லாமல் எப்படி நாசி லெமாக்கை சாப்பிடுவது? எனவே சம்பல் கேட்டால் அதற்குத் தனியாக கட்டணம் விதிக்கிறார்கள். இது என்ன கொடுமை என அவர் பதிவிட்டுள்ளார்.

இப்படித்தான் வாடிக்கையாளர்களின் பணத்தை ஏமாற்றுவீர்களா என தனது ஆதங்கத்தை Chef Zam பகிர்ந்த வீடியோ வைரலாகியுள்ளது.

இதுவரை 13 லட்சம் views-களும் 3,000 கருத்துகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

பெரும்பாலான நெட்டிசன்கள், நாங்கள் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள் என Chez Zam-மைப் பாராட்டினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!