
சவுதி அரேபியா, அக்டோபர் 9 – சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள், ஹூதி (Houthi) ஆயுதக் கும்பலால் ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாகத் தெரிவித்துள்ளன.
கூட்டுப் படைகள் அளித்த தகவலின் அடைப்படையில், அவ்விரண்டு ஏவுகணைகளும் தலைநகர் ரியாத்தையும் (Riyadh), மற்றொன்று தென்மேற்குப் பகுதியிலுள்ள கமிஸ் முஷைத் (Khamis Mushait) நகரையும் இலக்காகக் கொண்டு ஏவப்பட்டன.
இதற்கிடையில், யேமன் அரசுப் படைகள், ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை மீட்கும் நோக்கில் புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. 2014ஆம் ஆண்டு ஹூதி கிளர்ச்சியாளர்கள் யேமன் (Yaman) தலைநகர் சனாவைக் (Sanaa) கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டில் மோதல்கள் நீடித்து வருகின்றன. 2022ஆம் ஆண்டு போர் நிறுத்தத்துக்குப் பிறகு தணிந்திருந்த மோதல்கள், கடந்த ஜூலை மாதம் மீண்டும் தீவிரமடைந்தன.



