Latestஉலகம்

சால்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் இருவர் கைது

மும்பை, ஏப் 16 – மும்பையில் பிரபல இந்தி நடிகர் சால்மான் கான் வீட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் குற்றவியல் போலீஸ் குழுவினர் இரண்டு சந்தேகப் பேர்வழிகளை கைது செய்தனர். Vicky Gupta மற்றும் Sagar Pal ஆகிய அந்த இரண்டு நபர்களும் குஜராத்தின் Bhuj மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமையன்று மும்பையிலுள்ள Bandra Galazy அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் சால்மான் கான் வீட்டிற்கு வெளியே ஆறு முறை துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

அவற்றில் ஒரு தோட்டா சுவரிலும் இதர இரண்டு தோட்டாக்கள் சால்மான் கான் வீட்டின் முற்றத்திலும் பாய்ந்தன. துப்பாக்கிக் காரர்கள் சால்மான் கான் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் அவர்கள் ஏறி வந்த மோட்டார் சைக்கிளை மவுன்ட மேரி தேவலாயத்திற்கு அருகே போட்டுவிட்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பிச் சென்றனர். அவர்கள் பின்னர் ரயிலில் தப்பிச் சென்றதை Bandra ரயில் நிலையத்தின் சி.சி.டி.வி மூலம் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் இந்திய போலீசாரால் தேடப்பட்டுவரும் Lawrence Bishnoi கும்பலைச் சேர்ந்தவனுடன் தொடர்புள்ளவர்கள் என தெரியவந்துள்ளது. அந்த Lawrence Bishnoi கும்பல் தற்போது கனடாவில் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!