Latestமலேசியா

சிங்கப்பூரில் பல் வைத்தியம் பார்த்த மலேசியாவின் ‘படிக்காத மருத்துவருக்கு’ நீதிமன்றம் அபராதம்

சிங்கப்பூர், ஏப்ரல் 9 – முறையான உரிமம் இல்லாமல் பல் வைத்தியம் பார்த்த 37 வயது மலேசியப் பெண்ணுக்கு சிங்கப்பூரில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

JB-யில் ஹோட்டல் ஒன்றில் பகுதி நேர உணவுப் பரிமாறுபவராக வேலை செய்யும் Siti Shahrima Abd Rahim எனும் அப்பெண்ணுக்கு, சிங்கை மாவட்ட நீதிமன்றமொன்று 2,500 sing dollar அதாவது மலேசிய ரிங்கிட்டுக்கு 8,760 ரிங்கிட்டை அபராதமாக விதித்தது.

பல் மருத்துவப் பதிவுச் சட்டத்தின் கீழ் அப்பெண்ணுக்கு அந்த அபராதம் விதிக்கப்பட்டது.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் You Tube வீடியோக்களைப் பார்த்து பல் மருத்துவத்தைக் கற்றுக் கொண்டதாகக் கூறும் அப்பெண், அதன் பிறகு தன்னுடைய பல் சிகிச்சைக்குக் கூட மருத்துவமனைப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லையாம்.

ஒரு கட்டத்தில் தனது ‘பல் மருத்துவச் சேவை’ குறித்து விளம்பரம் செய்யும் அளவுக்கு Shahrima முன்னேறியிருக்கிறார்.

தாம் மலேசியாவைச் சேர்ந்த பல் மருத்துவர் என்றும், நோயாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களைச் சந்திப்பதற்காக சிங்கப்பூர் வந்துச் செல்வதாகவும் கூறி நம்ப வைத்துள்ளார்.

ஏதோ ஆண்டுக் கணக்கில் படித்து பட்டம் வாங்கியவர் போல், பற்கள் சீரமைப்பு, பற்களை வெண்மையாக்குதல், பல் கிளிப் சிகிச்சை உள்ளிட்ட சேவைகளை எல்லாம் சிங்கப்பூர் ஹோட்டல் அறைகளில் அவர் வழங்கி வந்துள்ளார்.

அச்சேவைகளுக்கு 650 முதல் 700 sing dollar வரை அவர் கட்டணமாக விதித்து வந்திருப்பதும் அம்பலமானது.

பல் சீரமைப்புக்கான veneer சிகிச்சைப் பெற்ற வாடிக்கையாளர் தனது பற்களைத் துலக்க முடியவில்லை என புகாரளித்ததை அடுத்து, Shahrima-வின் குட்டு வெளிச்சத்துக்கு வந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!