
கோலாலம்பூர், பிப்ரவரி -26- மலேசிய சைவ சமயப் பேரவை மற்றும் சைவ திருக்கோயில் கலை கல்வி அறவாரியம் அண்மையில் இரண்டு முக்கிய நிகழவுகளை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்தது.

அவற்றில் இம்மாதம் 15ஆம்தேதி சிவப் பேரிரிரவு நிகழ்ச்சி மிகவும் தனித்துவமாக கெர்லிங்கில் அமையவிருக்கும் சைவ திருக்கோயில் தளத்தில் 400க்கும் மேற்பட்டோர் அமரும் இடத்தில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.


வழிபாட்டுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேரவையின் தலைவர் மருத்துவர் பழனியப்பன் எட்டிக் கவுண்டரின் வரவேற்புரையும்,கலை கல்வி அறவாரியத்தின் தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் சிவப்பேரிரிவின் கொண்டாட்டத்தை மையமாக கொண்டு ஆற்றிய தலைமையுரையும் பக்தர்களின் மனதை பெரும் அளவில் கவர்ந்ததாக அமைந்தது.

நிகழ்வின் முத்தாய்ப்பாக தமிழகத்தின் கோல்ட் தேவராஜ் வழங்கிய சிவ கீர்த்தனைகளின் இசைக் கச்சேரி அனைவரின் மனதையும் சிவன்பால் ஈர்க்கும் வகையில் அமைந்தது. இதனிடையே பிரிக்பீல்ட்ஸ் டெம்பள் ஆப் பைன் ஆர்ட்ஸ் இசை அரங்கில் பிப்ரவரி 17ஆம் தேதியன்று நடைபெற்ற கோல்ட் தேவராஜ் அவர்களின் இசைக் கச்சேரி செவிக்கு விருந்தாக அமைந்தது.

சைவ திருக்கோயில் சைவக் கல்லுரி கட்டுமானத்திற்காக 50 மில்லியன் ரிங்கிட் செலவினை ஈடுகட்டும் நோக்கத்தில் நிதி திரட்டும் நிகழ்வாக அந்த இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ம.இ.காவின் முன்னாள் தேசியத் தலைவரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான டான்ஸ்ரீ எஸ். சுப்ரமணியம் மற்றும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



