Latestமலேசியா

கடன் வாங்காத குடும்பத்தின் மீது வட்டி முதலை கும்பல் தாக்குதல்; தம்பினில் பரபரப்பு

தம்பின், ஏப்ரல்-17-கடன்பெறாத குடும்பத்தின் மீது along எனப்படும் வட்டி முதலை கும்பல் அராஜகம் செய்துள்ள சம்பவம் நெகிரி செம்பிலான் தம்பினில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

​தாமான் இண்டாவில் வசிக்கும் Haw Hui Ching என்பவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் சிவப்பு சாயத்தை ஊற்றிச் சென்றுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தச் செயலில் ஈடுபட்டது CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

​தனது குடும்பத்தினர் யாருமே யாரிடமும் கடன் வாங்கவில்லை என்றும், இது தவறான அடையாளத்தால் நடந்திருக்கலாம் என்றும் Hui Ching தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலால் வீட்டோடு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சேதமடைந்தது.

இதனால் சுமார் 4,000 ரிங்கிட் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

​வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் இதய நோயாளியான தந்தையின் பாதுகாப்பு குறித்து அஞ்சும் குடும்பத்தினர், இது தொடர்பாகத் தம்பின் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

“நாங்கள் கடன் வாங்கவில்லை. தயவுசெய்து எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்” எனக் கெஞ்சிய Hui Ching, உண்மை நிலையை கண்டறிய தனது கணவர் Foo Ying Hau-வை தொடர்பு கொள்ளுமாறு அந்த வட்டி முதலை கும்பலுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!