சிறார் பாலியல் காணொளி விநியோகம் மீதான நடவடிக்கை; வயது குறைந்த அறுவர் உட்பட 31 பேர் கைது

கோலாலம்பூர், அக் 24 –
CSAM எனப்படும் சிறார் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கம் (CSAM) மீதான நாடு தழுவிய நடவடிக்கையில் 12 வயது முதல் 71 வயதுக்கிடையிலான 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 30 வரை நாடு தழுவிய 37 சோதனைகளில் 880,000 டிஜிட்டல் CSAM மற்றும் வயது வந்தோருக்கான ஆபாசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களில் 12 மற்றம் 17 வயதுடை அறுவரும் அடங்குவர் அடங்குவர் என தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (MCMC) ஒத்துழைப்புடன் பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் விசாரணைப் பிரிவுடன் இணைந்து கூட்டரசு போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் முகமட் காலிட் கூறினார்.
இக்கூட்டத்தில் கூட்டரசு குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார், தொடர்பு பல்லூடக ஆணையத்தின் தலைமை நெட்வொர்க் பாதுகாப்பு அதிகாரி டத்தோ டாக்டர் முகமது சுலைமான் சுல்தான் சுஹைபுதீன் ( Mohamed Sulaiman Sultan Suhaibuddeen) மற்றும் டி11 முதன்மை உதவி இயக்குநர் மூத்த உதவி ஆணையர் சித்தி கம்சியா ஹாசன் ஆகியோரும் உடனிருந்தனர்.
கோலாலம்பூர், சிலாங்கூர் , ஜோகூர், திரெங்கானு, பினாங்கு மற்றும் பேராவில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



