Latestமலேசியா

சிறுவனைத் துன்புறுத்தி உயிரிழக்கச் செய்த ஆடவருக்கு 8 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை

ஜோகூர் பாரு, அக்டோபர் 14 – மூன்று வயது சிறுவனைத் துன்புறுத்தி, அவனது மலத்தையே சாப்பிடக் கட்டாயப்படுத்திய ஆடவனுக்கு எட்டு ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆடவனுக்கு ஜோகூர் பாரு உயர் நீதிமன்றம் இன்று இந்தத் தண்டனையை விதித்தது. 2022ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில், சிறுவனைத் தலையில் அடித்தல், நீண்ட நேரம் நிற்க வைத்தல், உட்கார்ந்து எழும் தண்டனை வழங்குதல், பிரம்பால் அடித்தல் உள்ளிட்ட கொடூரமான செயல்களில் அவர் ஈடுபட்டது சிசிடிவி காணொளி மூலம் தெரியவந்தது.

சிறுவனைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த அவர், அந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தியதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இத்தகைய செயல்களைச் சிறுவனைத் திருத்துவதற்கான வழிமுறையாகக் கருத முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

குழந்தைகள் மீதான கொடுமைகளைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய நீதிமன்றம், சிறைத்தண்டனையுடன் மூன்று ஆண்டுகள் நன்னடத்தைப் பிணை மற்றும் 36 மணி நேர சமூகப் பணியையும் விதித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!