சீன சுடுகாட்டில் ஒழுங்கீனச் செயல்; ஜோடி கைது

பினாங்கிலுள்ள சீன சுடுகாட்டில் நிர்வாணமாக ஒழுங்கீனமற்ற செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு ஜோடி, வைரல் வீடியோவில் சிக்கியதை அடுத்து, போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
30 மற்றும் 50 வயதுடைய அந்தத் தம்பதியினர் நேற்று ஜார்ஜ் டவுன் அருகே கைது செய்யப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் (Azizee Ismail) கூறினார்.
தொடக்கக்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் கணவன் மனைவி அல்ல என்பது தெரியவந்துள்ளது என்று அஸிஸி கூறினார்.
நேற்று,நிர்வாணக் கோலத்தில் அந்த ஆணும் பெண்ணும் கல்லறையில் சல்லாபத்தில் ஈடுபடுவதும் வீடியோ எடுத்த பெண் அவர்களை கண்டிப்பதும் வைரலான 38 வினாடியில் தெரியவந்தது.
கல்லறைத் தோட்டம் என்பது இறந்தவர்களைக் கௌரவிப்பதற்காகவே உள்ளது என்று வலியுறுத்தி இது குறித்து போலீசில் புகார் செய்யப்போவதாக அப்பெண் கூறுவதையும் அந்த வீடியோவில் காணமுடிகிறது.
அந்த அருவருப்பான செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அந்த தம்பதியினரின் வீடியோ குறித்து போலீசார் விசாரணயை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தண்டனைச் சட்டத்தின் 294 மற்றும் 509 பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் Azizi தெரிவித்தார்.
.



