Latestஉலகம்

சீன வான்வெளியில் 7 ‘சூரியன்கள்’ காட்சித் தந்தன; கண்டு அதிசயித்த மக்கள்

ச்செங்டு, (சீனா), ஆகஸ்ட்-23 – சீனாவின், ச்செங்டுவில் (Chengdu) வானில் தோன்றிய அதிசயம் வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஒரே நேரத்தில் 7 ‘சூரியன்களைக்’ கண்டு ச்செங்டு மக்கள் வாயடைத்துப் போயினர்.

அணிவகுத்து காட்சித் தந்த அந்த 7 ‘சூரியன்களும்’ வெவ்வேறு ஒளி அளவைக் கொண்டிருந்தன;

அவற்றில் ஒன்று மேகத்திற்கு பின்னால் மறைந்திருந்தது பொது மக்களில் ஒருவர் பதிவுச் செய்த வீடியோவில் தெரிந்தது.

வானில் மிக மிக அரிதாக நடக்கும் விந்தையான அச்சம்பவம் சுமார் 1 நிமிடத்திற்கு நீடித்தாகக் கூறப்படுகிறது.

பார்ப்பதற்கு அதியசமாக இருந்தாலும், உண்மையில் அதற்கு அறிவியலில் பதிலுண்டு.

அதாவது, கண்ணாடி ஊடாக ஒளி விலகியதால் ஏற்பட்ட ஒளியியல் மாயை அல்லது ஒளியின் பிரதிபலிப்பே (optical illusion) அந்த 7 ‘சூரியன்களின்’ தோன்றலாகும்.

கண்ணாடியின் ஒவ்வோர் அடுக்கும் ஒரு கூடுதல் மெய்நிகர் படத்தை உருவாக்குகிறது; அப்படி உருவாகும் படங்களின் எண்ணிக்கை, பார்க்கும் கோணத்தைப் பொறுத்து மாறுபடலாம்.

ஆக, இந்த ச்செங்டு சம்பவத்தில், அந்த 7 ‘சூரியன்கள்’ அப்பகுதி வாழ் மக்களின் கண்களுக்குத் தெரிந்ததற்கு, மருத்துவமனையொன்றின் ஜன்னல் அடுக்குக் கண்ணாடி காரணமாக இருந்திருப்பதாக வானியல் நிபுணர்கள் கூறினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!