கோலாலம்பூர், ஆக 9 –
சீனா தயாரிக்கும் மின்சார காருடன் போட்டியிட முடியாததால் இவ்வட்டாரத்தில் தனது மின்சார கார் திட்டத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை தெஸ்லா ( Tesla ) நிறுவனம் ரத்துச் செய்திருப்பதாக முதலீடு, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் Tengku zafrul Abdul Aziz கூறியிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். தெஸ்லா நிறுவனம் குறித்து ஆகக்கடைசியான தகவலை Tengku Zarul பெற்றுள்ளார். அவர்கள் இழப்பை எதிர்நோக்கியதால் சீனாவின் மின்சார காருடன் போட்டியிட முடியவில்லை. எனவே அவர்களது தாய்லாந்தின் மிகப் பெரிய திட்டம் மற்றும் மலேசியாவில் தொடங்க வேண்டிய திட்டமும் நிறுத்தப்படுவதாக அன்வார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தெஸ்லா தனது தொழிற்சாலையை மலேசியாவில் திறக்கும் என அமைச்சு தெரிவிக்கவில்லையென Tengku Zafrul நேற்று தெரிவித்திருந்தார். தெஸ்லா நிறுவனத்தன் தோற்றுவிப்பாளர், மற்றும் Tesla Inc மற்றும் Space X தலைமை செயல் அதிகாரி Elon Musk உடன் முதலீடுகளை கவர்வதற்கான பேச்சு நடத்தப்பட்டது. ஆனால் மலேசியாவில் தனது தொழிற்சாலையை தொடங்கவிருப்பதாக அந்த நிறுவனம் எந்த வேளையிலும் தெரிவிக்கவில்லையன Tengku Zafrul கூறினார்.