Latestஉலகம்

சீனாவில், பிரசவ விடுமுறைக்கு செல்வதை தவிர்க்க, கர்ப்பிணிப் பெண்ணின் பானத்தில் விஷம் கலந்த சக பணியாளரின் செயல் அம்பலம்

பெய்ஜிங், ஏப்ரல் 1 – சீனாவில், அரசாங்க சார்பு நிறுவனம் ஒன்றின் பெண் பணியாளர் ஒருவர், தம்முடன் வேலை செய்யும் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் பானத்தில் விஷத்தை கலந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கர்ப்பிணிப் பெண் மகப்பேறு விடுப்பில் சென்றால், தனது பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் அந்நபர் அவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

அதனால், அந்த கர்ப்பிணிப் பெண் அருந்தும் பானத்தில், சம்பந்தப்பட்ட பணியாளர் விஷம் ஊற்றி செல்லும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.

பானத்தை அருந்திய போது விநோதமாக உணர்ந்ததால், சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து, தனது மேஜையின் மீது பொருத்தப்பட்டிருந்த மடிக்கடினிணி காமிராவை அந்த கர்ப்பிணிப் பெண் சோதனை செய்த போது, அச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

கர்ப்பிணிப் பெண் மகப்பேறு விடுப்பில் செல்வதை விரும்பாத அந்நபர் அவ்வாறு செய்ததும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அப்பெண்ணின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!