Latestமலேசியா

சுங்கப் பட்டாணியில் “குவே தியோ சூப்” உட்கொண்ட பள்ளி மாணவர்களுக்கு நச்சுணவு

சுங்கைப் பட்டாணி ,மே 21 – சுங்கைப் பட்டாணி Bandar Puteri Jaya தேசிய தொடக்கப்பள்ளியின் 65 மாணவர்கள் தங்களது பள்ளி சிற்றுண்டி நிலையத்தில் Kuetiau Soup உட்கொண்டதைத் தொடர்ந்து நச்சுணவு காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அந்த பள்ளியின் 4,5 மற்றும் 6ஆம் வகுப்பு மாணவர்கள் இடைவேளையின்போது Kuetiau Soup உட்கொண்டதைத் தொடர்ந்து வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுக் போக்கு பிரச்னைக்கு உள்ளாகினர். மதியம் 12 மணி வாக்கில் அதிகமான மாணவர்கள் இந்த நெருக்கடிக்கு உள்ளானதை தொடர்ந்து பள்ளி தரப்பு அவசர அழைப்பு சேவையை நாடியதாக அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் Zubir Othman தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களையும் விரைந்து சிகிச்சைக்காக கொண்டு செல்லும் நடவடிக்கையை பள்ளி நிர்வாகம் எடுத்தது. அந்த மாணவர்கள் அனைவரும் ஒரு வகுப்பில் வைக்கப்பட்டு அவர்களுக்கு Sultan Abdul Halim மருத்துவமனை மற்றும் Kuala Muda சுகாதார அலுவலக பணியாளர்கள் சேவையை வழங்கினர். அதன்பின் ஏழு மாணவர்கள் Sultan Abdul Halim மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களது நிலை சீராக இருப்பதாக Zubir Othman வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார். மேலும் அந்த பள்ளியின் சிற்றுண்டி நிலையம் விசாரணைக்காக மூன்று நாட்களுக்கு மூடும்படி உத்தரவிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!