திருசி, ஏப் 5 – சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார்
பஸ்சும் – டிரக் லோரியும் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் இருவர் மரணம் அடைந்ததோடு 14 பேர் காயம் அடைந்தனர். திருச்சியில் Sanjeevi Nagar ரில் நிகழ்ந்த அந்த விபத்தில் டிரக்குடன் அந்த பஸ் நேருக்கு நேர் மோதியது. சென்னையிலிருந்து 34 பயணிகளை ஏற்றிக்கொண்டு தேனீ மாவட்டத்திற்கு Cumbum வழியாக சென்ற அந்த பஸ் தர்மபுரியிலிருந்து புதுக்கோட்டைக்கு செங்கல் கற்களை ஏற்றிச்சென்ற லோரியின் பின்புறம் மோதியது.
விடியற்காலை மணி 4.30 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் அந்த பஸ் ஓட்டுனரான தேனீயைச் சேர்ந்த 38 வயது M. Chandran மற்றும் தின்டுக்கலைச் சேர்ந்த 68 வயது பயணி R. Palaniyamal விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தனர். அந்த பஸ்ஸில் இருந்த பயணிகளில் 14 பேர் காயம் அடைந்ததைத் தொடர்ந்து மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். மிக வேகமாக சென்ற அந்த பஸ் டிரக் லோரியை முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸ் தகவல்கள் தெரிவித்தன. அந்த விபத்தை தொடர்ந்து அந்த டிரக் ஓட்டுனர் அங்கிருந்து தப்பியோடினார்.