Latestமலேசியா

செராஸ்–காஜாங் நெடுஞ்சாலையில் விபத்து: மோட்டார் ஓட்டுநர் பலி; சாட்சிகளுக்கு வலை வீசும் போலீஸ்

செராஸ், அக்டோபர் 13 – செராஸ்–காஜாங் நெடுஞ்சாலையின் 13.1ஆவது கிலோமீட்டரில் நேற்று நிகழ்ந்த விபத்தில், 23 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

கோலாலம்பூரிலிருந்து காஜாங் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அவர், மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போது அதே வழியில் சென்ற லாரி, அவரைத் தவிர்க்க முடியாமல் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக மாலை 6 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாக காஜாங் மாவட்டக் காவல் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோப் (ACP Naazron Abdul Yusof) தெரிவித்தார். இவ்வழக்கு, மரணத்தை ஏற்படுத்திய ஆபத்தான வாகனமோட்டல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது தங்களது வாகனத்தின் டேஷ்கேம் பதிவில் விபத்து தொடர்பான காட்சிகளை வைத்திருப்பவர்கள், விசாரணை அதிகாரியைத் தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!