Latestமலேசியா

மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த ராணுவ வீரர் உயிரிழப்பு

கோலாலம்பூர், அக்டோபர் 13 — கோலாலம்பூரிலுள்ள எம்.ஆர்.ஆர்.2 (MRR2) நெடுஞ்சாலை மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த 24 வயதான ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று காலை 8.04 மணியளவில், புக்கிட் ஜாலிலிலுள்ள தனது வீட்டிலிருந்து சுங்கை பெசி ராணுவ முகாமுக்குச் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, மேம்பாலத்தில் திரும்ப முயன்ற அவர் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் மேம்பாலத்திலிருந்து கீழேயுள்ள சாலையில் விழுந்தார்.

அப்போது, கீழே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த 46 வயதான ஆடவர் மீது அவர் விழுந்தார். இருவரும் சாலையில் விழுந்த நிலையில், அவர்களைத் தவிர்க்க முயன்ற லாரி ஒன்று மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் ராணுவ வீரர் தலையிலும் உடலிலும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் இடது கை முறிந்ததுடன், முகத்திலும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டன. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். லாரி ஓட்டுநருக்குக் காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்து தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!