
சென்னை, நவம்பர்-28,தமிழகத்தின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ், பெண் IAS அதிகாரி ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாகக் கூறப்படும் புகாரில் ஒருவழியாகக் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற தலையீட்டை அடுத்து, சம்பவம் நடந்து 117 நாட்களுக்குப் பிறகு, கடந்த நவம்பர் 23-ஆம் தேதி அந்த மாவட்ட அதிகாரி அளித்த முறையான புகாரின் அடிப்படையில், 4 நாட்களுக்குப் பிறகு நேற்று மாலை 36 வயதான அருள் விக்னேஷ் அவரது வீட்டில் கைதானார்.
என்றாலும், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என அவர் மறுத்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் மூத்தப் போலீஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்தல் மற்றும் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
கட்சிக்காரரைக் காப்பாற்றும் நோக்கில் இந்த விவகாரத்தில் மெத்தனம் காட்டுவதாக சில நாட்களாக முதல்வர் விஜய் மற்றும் TVK அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் கைதாகியுள்ளார்.



