Latestமலேசியா

சைபர்ஜெயா பல்கலைகழக மாணவி கொலை வழக்கில் காதல் ஜோடி மீது குற்றச்சாட்டு; செப்டம்பர் 11 மறுசெவிமடுப்பு

செப்பாங், ஜூலை-10 – கடந்த மாதம் சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி Manisshapriet Kaur Akhara-வை கொலைச் செய்ததாக, ஒரு வேலையில்லாத இளைஞனும் அவனது காதலியும் இன்று செப்பாங் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

பல்கலைக்கழக மாணவர் குடியிருப்பில் Maniisha-வின் சடலம் ஜூன் 24-ஆம் தேதி கண்டெக்கப்பட்ட 48 மணி நேரங்களில் கைதான நால்வரில் இந்த காதல் ஜோடியும் அடங்கும்.

உடன் கைதான மேலுமிருவர் மீது குற்றச்சாட்டு எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.

ஜூன் 23-ஆம் தேதி இரவு 9.11 மணிக்கும் 11.31 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், சைபர்ஜெயா, பெர்சியாரான் மல்டிமிடியா, முத்தியாரா வில்லா அடுக்குமாடி குடியிருப்பில் அக்கொலையைப் புரிந்ததாக, 19 வயது ஸ்ரீ டர்வின் மாதவன் மீது குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் குற்றம் சுமத்தப்பட்டது.

அதே நாளில் அதே இடத்தில் அதே நேரத்தில் அந்த முதன்மைக் குற்றவாளிக்கு உடந்தையாக இருந்ததாக, அவனது காதலியான 19 வயது வி. டெனிஸ்வரி 302-ஆவது சட்டத்துடன் இணைந்து 109-ஆவது சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.

கொலைக் குற்றம் உயர் நீதிமன்ற அதிகார வரம்பில் இருப்பதால், இருவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.

கொலைக் குற்றம் என்பதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை.

இதனால் வழக்கை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவதை விரைந்து மேற்கொள்ளுமாறு ஸ்ரீ டர்வின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் கேட்டுக் கொண்டார்.

அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி , வழக்கின் மறுசெவிமெடுப்பை செப்டம்பர் 11-ஆம் தேதி நிர்ணயித்தார்.

தடயவியல் மற்றும் சவப்பரிசோதனை அறிக்கைகள் முழுமைப் பெற வேண்டியிருப்பதால், அரசு தரப்பு முன்னதாக சற்று கால அவகாசம் கேட்டது குறிப்பிடத்தக்கது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படலாம்.

இவ்வேளையில் கொலையுண்ட Maniisha சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் டத்தோ ராஜ்பால் சிங்கும் வணக்கம் மலேசியாவிடம் பேசினார்.

முன்னதாக செப்பாங் நீதிமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு போடப்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் செப்பாங் போலீஸ் தலைவர் நோர்ஹிசாம் பஹாமான் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!