
ஷா ஆலாம், ஜூலை-8 – சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் முதன்மை சந்தேக நபர் மீது இன்று சுமத்தப்படவிருந்த கொலைக் குற்றச்சாட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சட்டத் துறை தலைவர் அலுவலகத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் கூறினார்.
அடுத்தக் கட்ட நகர்வு குறித்து கூடிய விரைவிலேயே அறிவிக்கப்படும் என்றார் அவர்.
சந்தேக நபரான இளைஞன் செப்பாங் நீதிமன்றத்தில் இன்று கொலைக் குற்றம் சாட்டப்படுவான் என முன்னதாக ஹுசேய்ன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக மாணவர் குடியிருப்பில் Maniisha எனும் அப்பெண்ணின் சடலம் ஜூன் 26-ஆம் தேதி கண்டெக்கப்பட்ட 48 மணி நேரங்களில் கைதான நால்வரில் இவ்வாடவனும் ஒருவனாவான்.