
தோக்யோ, ஜூலை-9 – ஜப்பானில் தனது அறையில் தங்கியிருந்த சகத் தோழியின் உதடுகளை ஊசியால் தைத்ததாகக் கூறி, 49 வயது மாது ஒருவர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
தலைநகர் தோக்யோவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கைதுச் செய்யப்பட்ட பெண், தனது சக தோழியின் உதடுகளைச் சாதாரண ஊசி மற்றும் நூலைப் பயன்படுத்தி ஒன்றாகத் தைத்ததாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட 42 வயது பெண் மருத்துவமனைக்குச் சென்றதையடுத்து, மருத்துவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அந்தப் பெண்ணை போலீஸார் உடனடியாகக் கைதுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டாரா என தெரியவில்லை.
எனினும், இருவருக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு மற்றும் மோதல் காரணமாகவே இந்தத் தாக்குதல் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.



