
ஜார்ஜ் டவுன், மே 15 – ஜாலான் மஸ்ஜிட் நெகிரி (Jalan Masjid Negeri) பகுதியில் உள்ள உடினி கீழ்ச் சுரங்கப்பாதையான Udini Underpass சாலையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் மூன்று வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.
விபத்தில் கான்க்கிரீட் தூண்களை ஏற்றிச் சென்ற லாரி, தொழிலாளர் வேன் மற்றும் கார் ஆகியவை சம்பந்தப்பட்டன. எனினும், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு உதவி இயக்குநர் ஜோன் சாகுன் பிரான்சிஸ் (John Sagun Francis) கூறுகையில், காலை 7.04 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக தெரிவித்தார்.
ஜாலான் பேராக் (Jalan Perak) தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுமார் 30 நிமிடங்களுக்குள் தீயை கட்டுப்படுத்தினர்.
இதற்கிடையில், பினாங்கு மாநகராட்சி (MBPP), பொதுமக்களை மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.



