Latestமலேசியா

ஜித்ராவில் மின் கம்பத்தில் அமர்ந்திருந்த வெளிநாட்டு ஆடவர்; 2 மணி நேரம் போராட்டம் கழித்து கீழே இறங்க வைத்த தீயணைப்பு வீரர்கள்

ஜித்ரா, மே 21 – ஜித்ராவில் Kampung Muhibah வில் குறைந்தது இரண்டு மணி நேரம் உயரிய மின் ஆற்றலைக் கொண்ட மின்கம்பத்தின் மேல் ஏறியிருந்த வெளிநாட்டு ஆடவரை கீழே இறங்க வைப்பதில் தீயணைப்பு வீரர்கள் வெற்றி பெற்றனர். 30 வயதுடைய அந்த நபரை ALP எனப்படும் Aerial Ladder Platform இயந்திரத்தின் மூலம் நேற்றிரவு 8.43 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் கீழே இறக்கினர். அந்த மின்கம்பத்தின் மின் விநியோகத்தை நிறுத்துவதற்கு இதற்கு முன் Tenaga Nasional பணியாளர்களும் அழைக்கப்பட்டதாக ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் மூத்த துணை அதிகாரி Mohd Bustan Karudin தெரிவித்தார். நீண்ட நேரம் நடத்தப்பட்ட பேச்சுக்களினால் 25 மீட்டர் உயரத்தின் மின் கம்பத்திலிருந்து அந்த ஆடவர் பாதுகாப்புடன் கீழே கொண்டுவரப்பட்டார். நேற்றிரவு திடீரென அந்த ஆடவர் அதிக ஆற்றலைக் கொண்ட மின் கம்பத்தில் ஏறியதால் Kampung Muhibbah குடியிருப்புவாசிகள் பரபரப்புக்கு உள்ளாகினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!