ஷா ஆலாம், ஜூலை-12, சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான Jobcare வேலை வாய்ப்புக் கண்காட்சி அடுத்தக் கட்டமாக ஜூலை 17-ஆம் தேதி, புதன்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் நடைபெறவுள்ளது.
Menara BAC கோபுரத்தின் மூன்றாவது மாடியில் உள்ள Horizon Banquet மண்டபத்தில் காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை அது நடைபெறும்.
இந்த வேலை வாய்ப்புக் கண்காட்சியில் பல்வேறு தொழில்துறைகளைச் சார்ந்த ஏராளமான நிறுவனங்கள் சேவை முகப்புகளைத் திறக்கவிருக்கின்றன.
எனவே வேலைத் தேடுவோர் இவ்வாய்ப்பை நன்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி.பாப்பாராயுடு கேட்டுக் கொண்டார்.
அன்றைய நாள் முழுவதும் அங்கு வேலைக்கான நேர்முகத் தேர்வும் நடத்தப்படும்.
எனவே, வருபவர்கள் கையோடு தங்களின் சுய விவரங்கள் அடங்கிய ஆவணங்களின் நகல்களையும், இன்னபிற சான்றிதழ்களையும் கொண்டு வருவது நல்லது என பாப்பாராயுடு கூறினார்.
ஆர்வமுள்ளோர் இந்த https://bit.ly/JobcarePJ link-கில் முன் கூட்டியே பதிந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.