பெர்லின், ஆகஸ்ட் -24 – ஜெர்மனியில் மர்ம நபர் நடத்தியக் கத்திக் குத்து தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர்.
நால்வர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு ஜெர்மனி நகரான Solingen உருவாகி 650 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி நடத்தப்பட்ட கொண்டாட்டங்களின் போது அத்தாக்குதல் நடந்தது.
கூட்டத்தில் புகுந்த ஆடவன், வருவோர் போவோரைக் கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியதாக நேரில் பார்த்த சாட்சிகள் கூறினர்.
உடனடியாக சம்பவ இடத்தை விட்டு கலைந்துச் செல்லுமாறு பொது மக்களை அறிவுறுத்திய போலீஸ், தப்பியோடிய மர்ம நபரை தீவிரமாகத் தேடி வருகிறது.
கத்திகளை உட்படுத்திய குற்றச்செயல்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்பட வேண்டுமென, ஜெர்மனி உள்துறை அமைச்சர் கூறிய ஒரே வாரத்தில் இத்தாக்குதல் நடந்துள்ளது.