ஜோகூர், அக்டோபர் 2 – ஜோகூரிலுள்ள ஐந்து மாவட்டங்களில் பெரிய அளவிலான Op Global நடவடிக்கையில், குளோபல் இக்வானுடன் இணைந்து செயல்படும் எட்டு வளாகங்களிலிருந்து 29 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் 30 சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மீட்கப்பட்டனர்.
இந்நடவடிக்கையில், ஜோகூர் மாநிலம் முழுவதும் 43 வளாகங்கள் குளோபல் இக்வானின் கீழ் செயல்படுவது தெரிய வந்துள்ளதாக ஜோகூர் மெந்திரி பிசார் டத்தோ ஓன் ஹபீஸ் காசி கூறினார்.
செப்டம்பர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெற்ற இச்சோதனை, ஜோகூர் பாரு, குளுவாங், செகாமட், கோத்தா திங்கி மற்றும் மெர்சிங் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.