ஜோகூர் பாரு, ஏப் 10 – ஜோகூரில் கடந்த 8 வாரங்களாக கோவிட்-19 தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் லிங் தியான் சூன் (Ling Tian Soon ) தெரிவித்திருக்கிறார். ஜூன் 3 ஆம் தேதி முதல் ஜூன் 9 ஆம் தேதி வரையிலான 23 வது வாரத்தில் 263 கோவிட் -19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது முந்தைய வாரத்தில் 249 தொற்றுகள் மட்டுமே பதிவாகியிருந்ததை ஒப்பிடுகையில் இம்மாதத்தின் முதல் வாரத்தில் தொற்று அதிகரித்துள்ளன. ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 21ஆம் தேதிவரை கோவிட் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக லிங் தியான் சூன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
பொதுமக்கள் தனிப்பட்ட சுகாதாரத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்பதோடு , உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அல்லது நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவரிகளை அணியும்படி அவர் கேட்டுக்கொண்டார். சிங்கப்பூரில் கோவிட் -19 தொற்று தொடர்ந்து இருந்துவருவதால் ஜோகூரிலும் தொற்று அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஜோகூர் மாநிலம் முழுவதிலும் உள்ள 14 மருத்துவமனைகிளில் கோவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் அவர்களில் எவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவில்லை.