Latestமலேசியா

ஜோகூர் இளைஞர்களுக்கான BOMJ 2026 கல்வி உபகாரச் சம்பளம் அறிவிப்பு – ரவின்குமார்

ஜோகூர் பாரு, ஏப்ரல்-4-ஜோகூர் மாநில இளைஞர்களுக்காக, 2026 கல்வி உபகாரச் சம்பளத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோகூர் கல்வி அறக்கட்டளை வழங்கும் இந்த Biasiswa Orang Muda Johor (BOMJ) உபகாரச் சம்பளம், 2025/2026 ஆம் ஆண்டுக்கான SPM தேர்வில் சிறந்த முடிவுகளைப் பெற்ற மாணவர்களுக்கானதாகும்.

உலகின் முன்னணி 20 பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர விரும்புவோருக்கான இந்த உபகாரச் சம்பளம் முழு நிதி ஆதரவை வழங்குவதாக, மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ரவின்குமார் கிருஷ்ணசாமி கூறினார்.

வெளிநாட்டில் கல்வி தொடரும் முன், மாணவர்கள் உள்நாட்டில் A-Level படிப்பை பயிலும் வாய்ப்பும் இதில் அடங்கியுள்ளது.

ஜோகூர் மாநிலத்தின் முன்னுரிமைத் துறைகளில் உயர்கல்வி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இதில் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும் என்றார் அவர்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஏப்ரல் 19-ஆம் தேதியாகும்.

மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இந்த உதவித்தொகை முழுமையான ஆதரவு அளிப்பதால் ஜோகூர் மாநில இளைஞர்கள், இந்த சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரவின்குமார் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!