Latestமலேசியா

ஜோகூர் பாரு ஹோட்டலில் கத்திக் குத்து காயங்களுடன் இறந்து கிடந்த வெளிநாட்டு பாலியல் தொழிலாளி

ஜோகூர் பாரு , தாமான் மாஜூவிலுள்ள ( Taman Maju ) பட்ஜெட் ஹோட்டலில் பாலியல் தொழிலாளியாக இருந்ததாக நம்பப்படும் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கத்திக் குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார்.

அவரது நெஞ்சு மற்றும் கழுத்துப் பகுதியில் ஆழமான கத்திக் குத்து காயங்கள் இருந்தன.

அதோடு ஆள்காட்டி விரல் மற்றும் கையிலும் காயங்கள் காணப்பட்டதாக தென் ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ரவ்ப் செலமாட் ( Raub Selamat ) தெரிவித்தார்.

37 வயதான பாதிக்கப்பட்ட நபர் அதிகாலை மணி 1.30க்கும் விடியற்காலை மணி 4.30க்குமிடையே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இரத்த வெள்ளத்தில் அப்பெண்ணின் உடல் ஹோட்டல் அறையில் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த படுகொலை தொடர்பில் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என நம்பப்படும் சந்தேகப் பேர்வழியை போலீசார் தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!