
அமெரிக்கா, ஆகஸ்ட் 20 – அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் (Donald Trump), வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை (Kim Jong Un) 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மீண்டும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இருவரும் நல்ல உறவை கொண்டிருப்பதாகவும், கிம்முடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வடகொரியாவிடம் 57 சக்திவாய்ந்த அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நவம்பரில் சீனாவில் நடைபெறும் APEC உச்சி மாநாட்டின்போது இந்த சந்திப்பு நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் தனது முதல் ஆட்சிக்காலத்தில் கிம்மை மூன்று முறை சந்தித்துள்ளார். இதற்கிடையில், கிம் யோ ஜோங் (Kim Yo Jong), டிரம்ப் மற்றும் தனது சகோதரருக்கு இடையே சமீபத்தில் தொடர்பு ஏற்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து தனக்கு தெரியாது என கூறினார். இருப்பினும், கிம்முக்கு டிரம்ப் குறித்து நல்ல நினைவுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.



