Latestமலேசியா

டீசல் ஏற்றுமதி குறித்து பொய்ச் செய்தி; சந்தேக நபரிடம் MCMC விசாரணை

சைபர்ஜெயா, ஏப்ரல்-24-மலேசியாவிலிருந்து பிலிப்பின்ஸுக்கு டீசல் ஏற்றுமதி செய்யப்படுவதாகப் பொய்ச் செய்திகளைப் பரப்பிய நபர் ஒருவரிடம் மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC இன்று வாக்குமூலம் பதிவுச் செய்துள்ளது.

சைபர்ஜெயாவில் உள்ள MCMC தலைமையகத்திற்கு வழக்கறிஞர்களுடன் வந்த அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இது தொடர்பாக ஒரு கைபேசியும் சிம் அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 500,000 ரிங்கிட் அபராதமும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

மலேசியாவிலிருந்து 52 மில்லியன் லிட்டர் டீசல் பிலிப்பின்ஸுக்கு அனுப்பப்பட்டதாக இணையத்தில் பரவிய தகவலை அரசாங்கமும் பெட்ரோனாஸ் நிறுவனமும் ஏற்கனவே மறுத்துள்ளன.

அந்த எரிபொருள் Vitol என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும், அது மலேசிய டீசல் அல்ல என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!