Latestமலேசியா

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: மரண விசாரணை தாமதம் ஏன்?, AGC-யிடம் ராயர் கேள்வி

கோலாலம்பூர், செப்டம்பர்-28,மலாக்கா, டுரியான் துங்காலில் 3 இந்திய ஆடவர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணை இன்னும் தொடங்கப்படாதது ஏன் என, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தத் தாமதத்திற்கான காரணத்தை சட்டத்துறைத் தலைவர் அலுவலகமான AGC பொது மக்களுக்கு விளக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கடந்தாண்டு நவம்பர் 24-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட போலீஸ் நடவடிக்கையின்போது, M. புஷ்பநாதன், T. புவனேஸ்வரன் மற்றும் G. லோகேஸ்வரன் ஆகிய மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்கள் போலீஸாரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டாலும், குடும்பத்தார் அம்மரணத்தில் சந்தேகத்தை எழுப்பியதால் விஷயம் பெரிதானது.

இந்நிலையில், இந்த மரணங்களுக்கான காரணம் மற்றும் சம்பவச் சூழ்நிலைகளைக் கண்டறிய, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் மரண விசாரணை நடத்த கடந்த ஜூலை 20-ஆம் தேதி AGC அலுவலகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, விசாரணை முடிவடைந்துள்ளதாகவும், மரண விசாரணை நடத்துவதற்கான விண்ணப்பம் மலாக்காவில் தாக்கல் செய்யப்படும் என்றும் புக்கிட் அமான் போலீஸ் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தெரிவித்தது.

எனினும், 2 மாதங்களுக்கும் மேலாகியும் மரண விசாரணைத் தொடங்கப்படவில்லை.

அதற்கானக் காரணத்தை AGC தெளிவுப்படுத்த வேண்டும் என ராயர் கேட்டுக்கொண்டார்.

சம்பவம் தொடர்பாக போலீஸாரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்துள்ள நிலையில், உண்மையிலேயே என்னதான் நடந்தது என்பதை சுயேச்சையாகக் கண்டறிய இந்த மரண விசாரணை முக்கியமானது என ராயர் அறிக்கையொன்றில் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!