புக்கிட் மெர்தாஜம், ஜூலை 26 – தங்கம் மற்றும் ஐபோன் நவீன தொலைபேசி விற்பனை தொடர்பில் ஏமாற்றியதாக தங்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களை இரண்டு பெண்கள் மறுத்தனர். கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதிக்கும் ஜூலை 9 ஆம் தேதிக்குமிடையே 24 வயதுடைய பிரெண்டா பிரியா ( Brenda Priya) மற்றும் 25 வயதுடைய அனெதா யுவெத்தா பீட்டர் எட்வர்ட் ( Aneta Yvette Peter Edward ) ஆகிய இருவரும் மூன்று தனிப்பட்ட நபர்களை ஏமாற்றியதாக மாஜிஸ்திரேட் முகமட் ஹரித் முகமட் மஸ்லான் ( Mohd Harith Mohd Mazlan ) முன்னிலையில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டட்டனர்.
8,840 ரிங்கிட் மதிப்புள்ள 116 கிரேம் தங்கம் மற்றும் IPhone 15 Pro Max தொலைபேசி ஆகியவற்றை விற்பனை செய்வது தொடர்பான மூவரை ஏமாற்றியதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது செபெராங் பிறை தெங்கா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர்கள் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. அவ்விருவரும் 9,000 ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.