Latestஇந்தியா

தமிழ்த் திரையிசையுலகில் சோகம்; ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்

சென்னை- தமிழ் சினிமாவில் தனது இனிமையான இசையால் ரசிகர்களைக் கவர்ந்த ‘தேனிசைத் தென்றல்’ தேவா, 75 வயதில் காலமானார்.

திடீர் நெஞ்சுவலி காரணமாக இன்று காலை சுமார் 8.30 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மாரடைப்பால் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1989ஆம் ஆண்டு மனசுக்கேத்த மகராசா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தேவா, ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் கானா பாடல்கள் பிரபலமடைய முக்கியப் பங்காற்றிய அவர், 450க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ரஜினிகாந்தின் படங்களின் டைட்டில் கார்டில் இடம்பெறும் பிரபலமான பின்னணி இசையையும் தேவாவே உருவாக்கினார். அவர் கடைசியாக ஒய்.ஜி. மகேந்திரன் நடித்த சாருகேசி திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.

தேவாவின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!