
தாய்லாந்து, ஜன 14 -தாய்லாந்தில் கட்டுமான பணியில் இருந்த பழுதூக்கி ஒன்று பயணிகள் ரயிலின் மீது விழுந்ததில் 22 பேர் உயிரிழந்ததுடன் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கோர விபத்து தாய்லாந்தின் நாகோன் ராட்சசிமாவில் நிகழ்ந்து. நேற்று
காலை சுமார் 9 மணியளவில், அதிவேக ரயில் பாதை கட்டுமான பணியின் போது இந்த சம்பவம் நடந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.
ரயில் பாங்காக்கிலிருந்து உபோன் ராட்சத்தானி நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், அதில் 195 பயணிகள் இருந்தனர்.
சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் உடனடியாக விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றனர்.
விபத்துக்குள்ளான பழுதூக்கி சீனாவின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் 5.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அதிவேக ரயில் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், 2028க்குள் லாவோஸ் வழியாக பாங்காக்கை சீனாவின் குன்மிங்குடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.



