
மலேசிய இந்திய மக்கள் கட்சி (MIPP) , அரசியல் வரலாற்றில் தாய்மொழியான தமிழுக்கென தனிப் பிரிவை உருவாக்கிய முன்னோடி அரசியல் கட்சியாக திகழ்கிறது.
தமிழ் மொழியின் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் அடுத்த தலைமுறையினரிடையே தமிழ் மொழிப் பற்றை வளர்க்க வேண்டும் என்ற மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தேசியத் தலைவர் உயர்திரு புனிதன் அவர்களின் சீரிய சிந்தனையின் அடிப்படையில் தமிழ்ப் பிரிவு உருவாக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், MIPP தமிழ்ப் பிரிவின் தலைவர் திரு. மன்மதன் துரைசாமி அவர்களின் ஏற்பாட்டில், மறைந்த துன் சாமிவேலு அவர்களின் சேவை, சாதனை மற்றும் சமூகப் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் “துன் சாமிவேலு நினைவு நாள் முன்னிட்டு புதுக்கவிதைப் போட்டி” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலேசிய இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்கும் துன் சாமிவேலு அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதுடன், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை ஊக்குவிப்பதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாகும்.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டியாளர்கள் துன் சாமிவேலு அவர்களின் சேவை, சாதனை மற்றும் சமூகப் பங்களிப்பை மையமாகக் கொண்டு 20 முதல் 40 வரிகளுக்குள் புதுக்கவிதை எழுத வேண்டும்.
ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு கவிதையை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
போட்டிக்கான பரிசுகள்
🥇 முதல் பரிசு – RM500.00
🥈 இரண்டாம் பரிசு – RM300.00
🥉 மூன்றாம் பரிசு – RM200.00
முக்கிய தேதிகள்
📅 கவிதை சமர்ப்பிக்கும் இறுதி நாள்: 13.09.2026
🏆 வெற்றியாளர்கள் அறிவிப்பு: 15.09.2026 – துன் சாமிவேலு நினைவு நாள்
போட்டியாளர்கள் தங்களது கவிதைகளை 017-639 6057 என்ற தொலைபேசி எண்ணிற்கு புலனம் (WhatsApp) மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
MIPP தமிழ்ப் பிரிவு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் இப்போட்டியில் தமிழ் ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு, துன் சாமிவேலு அவர்களின் சேவையை நினைவுகூர்ந்து, கவிதை வரிகளால் அவரது பங்களிப்புகளைப் போற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-மலேசிய இந்திய மக்கள் கட்சி (MIPP)-



