Latestமலேசியா

துபாயில் இருந்து வந்த அழைப்பை நம்பி 10 லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்த காய்கறி வியாபாரி

குவாந்தான், ஏப்ரல் 10 – பஹாங், கேமரன் மலையைச் சேர்ந்த 69 வயது காய்கறி வியாபாரி, இணைய மோசடியை நம்பி 10 லட்சம் ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.

துபாயில் இருக்கும் வங்கியொன்றின் அதிகாரி என ஆள்மாறாட்டம் செய்தவரிடம் இருந்து கடந்தாண்டு மே மாதம் அவர் கைப்பேசி அழைப்பை பெற்றிருக்கிறார்.

துபாய் வங்கிக் கணக்கில் மலேசிய ரிங்கிட்டுக்கு 12 கோடியே 70 லட்சத்தை சேமித்து வைத்திருக்கும் நபர் ஒருவர் திடீரென இறந்து விட்டதாகவும், அவருக்கு உறவினராக நடித்தால் கமிஷன் தொகையாக 50% தருவதாகவும், அழைத்தவர் ஆசை வார்த்தைகளைக் கூறியிருக்கிறார்.

பாதிக்கப்பட்டவரை நம்ப வைக்கும் முயற்சியில், அனைத்துப் பரிவர்த்தனைகளையும் கச்சிதமாக முடித்துக் கொடுக்கும் வழக்கறிஞர் என ஒருவரையும் அந்த வங்கி அதிகாரி அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

இதனால் எந்த சந்தேகமும் வராத அந்த காய்கறி வியாபாரி, 26 வங்கிக் கணக்குகளில் 70 தடவை என தனது சேமிப்புப் பணமான 10 லட்சம் ரிங்கிட்டையும் போட்டிருக்கிறார்.

ஆனால் கூறப்பட்டது போல் தமக்கு கமிஷனும் வரவில்லை, போட்ட பணமும் மொத்தமாகப் பறி போய்விட்டதென அம்முதியவர் தனது போலீஸ் புகாரில் கூறியுள்ளார்.

ஊர் பேர் தெரியாதவர்களை நம்பி வங்கிக் கணக்குகளில் பணம் போடுவதை இனியாவது நிறுத்துங்கள் என பஹாங் மாநில போலீஸ் தலைவர் Datuk Seri Yahaya Othman வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!