
தும்பாட், ஜூன்-1 – கிளந்தான், தும்பாட்டில் பூட்டப்பட்ட அறை ஒன்றினுள் அழுகிய நிலையில் ஆடவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Kampung Dalam Rhu கிராமத்தில் உள்ள வீட்டொன்றில், வேலை இல்லாத 35 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரின் சடலத்தை அவரது தாயாரே கண்டெடுத்தார்.
நேற்று முன்தினம் மாலை 6.27 மணியளவில் போலீஸாருக்கு இது குறித்து தகவல் கிடைத்து, தும்பாட் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் சம்பவ இடம் விரைந்தனர்.
சடலம் முற்றிலும் அழுகிய நிலையில் இருந்ததால், சவப் பரிசோதனையில் அவரது மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என தும்பாட் மாவட்ட போலீஸ் கூறியது.
தற்போதைக்கு இந்தச் சம்பவத்தில் எந்தவொரு குற்ற அம்சங்களும் கண்டறியப்படவில்லை.
எனவே , இது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள் போலீஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



