
சியோல், ஏப்ரல்-11-தென் கொரியாவில் மிருகக்காட்சி சாலையிலிருந்து தப்பிய ஓநாயைப் பிடிக்க, 300 பேர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
30 கிலோ கிராம் எடையிலான அந்த ஒன்றரை வயது ஆண் ஓநாய் கடந்த புதன்கிழமையன்று, மண்ணைத் தோண்டி, வேலியைச் சேதப்படுத்தி, அதன் கூண்டிலிருந்து தப்பியது.
பின்னர் ஏதோ ஒரு சாலையில் அது சுற்றித் திரிந்த CCTV காட்சிகள் வைரலாகின.
இதனால் பொது மக்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் அதிகரித்துள்ளது.
அருகிலுள்ள ஒரு பள்ளியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது.
3 நாட்களாகியும் ஓநாய் இன்னும் பிடிபடாததால், போலீஸ், தீயணைப்பு-மீட்புத் துறையினர், இராணுவ வீரர்கள் இணைந்து பெரிய அளவில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ட்ரோன் வழியாகவும் தேடல் பணிகள் நடைபெறுகின்றன.
இதற்கு முன் 2023-ஆம் ஆண்டு இதே போல் வரிக் குதிரையொன்று தென் கொரிய மிருகக்காட்சி சாலையிலிருந்து தப்பி சாலைகளில் சுற்றித் திரிந்தது.
பின்னர் ஒரு குறுகலான சாலையில் கண்டுபிடிக்கப்பட்டு, மயக்க ஊசி மூலம் எந்தவொரு காயமும் ஏற்படாமல் கொண்டுச் செல்லப்பட்டு அதன் கூண்டால் அடைக்கப்பட்டது.



