
நானிங், மே 18 -தென் சீனாவில் குவாங்சி ஜுவாங் ( Guangxi Zhuang)
தன்னாட்சிப் பிரதேசத்தில் லியுஷோ ( Liuzhou ) நகரில், திங்கள்கிழமை நள்ளிரவில் ரெக்டர் கருவியில் 5.2 அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த பேரிடரில் மூவர் காணாமல் போனதாகவும், மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி லியுனான் மாவட்டத்தில் அதிகாலை மணி 12.21க்கு , எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டதாக சீன நிலநடுக்க தகவல் மையம் தெரிவித்தது.
அவசரகால அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸ் துறையைச் சேர்ந்தவர்கள் தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலநடுக்க நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பணிக்குழு அனுப்பப்பட்டுள்ளது.
உயிரிழப்புகள் மற்றும் சேதங்களின் எண்ணிக்கையை கூடிய விரைவில் உறுதிப்படுத்தவும், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் , பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றவும், மொத்தம் 51 தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்களும், 315 பணியாளர்களும் அனுப்பப்பட்டனர்.



