
கோலாலம்பூர், அக்டோபர்-28,
மலேசிய பூப்பந்து சங்கமான BAM, தேசிய வீரர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் வந்த மிரட்டல் மற்றும் அவதூறு செய்திகள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சில தேசிய வீரர்கள் அண்மையில் இணைய துன்புறுத்தலுக்கு ஆளாகி மிரட்டல்களையும் பெற்றதாகக் கூறியுள்ளனர்.
இது கொஞ்சமும் ஏற்புடையதல்ல என சாடிய BAM, விளையாட்டில் மிரட்டல்களுக்கும் வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்கும் இடமில்லை என்றது.
இந்நிலையில் மிரட்டல் விடுத்தவர்களை அடையாளம் காண ஏதுவாக அதிகாரத் தரப்புடன் BAM அணுக்கமாக ஒத்துழைத்து வருகிறது.
எது எப்படி இருப்பினும் வீரர்களின் பாதுகாப்பும் கண்ணியமும் காக்கப்படுமென அச்சங்கம் உறுதியளித்தது.
இசிகர்கள் மற்றும் பொது மக்கள் விளையாட்டு வீரர்களை ஊக்கமூட்டி ஆதரிக்கவும், நாட்டின் விளையாட்டு மரியாதையை குலைக்கும் செயல்களை தவிர்க்கவும் BAM கேட்டுக் கொண்டுள்ளது.



