கோலாகங்சார், ஜூலை 8 – பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் ஒத்துழைப்புக்கான வியூகம் குறித்து தேசிய முன்னணி உச்சமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்திருக்கிறார். ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடையே மோதல் மற்றும் கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பதற்கு கலந்துரையாடல் அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுத் தேர்தலின்போது எங்களது வேட்பாளர்கள் தேசிய முன்னணி சின்னத்தை பயன்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை கொண்டிருப்பதால் முன்கூட்டியே அதற்கான செயல் திட்டத்தை ஈடுபடவதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.
ஒரே தொகுதியில் போட்டியிடுவது போன்ற நெருக்கடிகளை தவிர்ப்பது மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது போன்ற விவகாரங்களிலும் தேவையற்ற குழப்பங்களை தீர்க்க வேண்டியிருப்பதாக அகமட் ஸாஹிட் தெரிவித்தார். ம.இ.காவும் ம.சீ.சாவும் இத்தகைய கலந்துரையாடலக்கு தயாராய் உள்ளனவா என்று கேட்டபோது அவ்விரு கட்சிகளும் ஒற்றுமை அரசாங்க கட்சிகளுடனான உறுப்பு கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக ஸாஹிட் மறுமொழி தெரிவித்தார்.