தைப்பே, நவம்பர்-22, 2022-ஆம் ஆண்டு மலேசிய மாணவியை கொலைச் செய்த குற்றத்திற்காக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் தைவானிய ஆடவன், அப்பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடாக 824,000 ரிங்கிட்டை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளான்
தைவான் தலைநகர் தைப்பேயில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.
2023 ஆகஸ்டிலிருந்து ஆண்டு வட்டியாக 5 விழுக்காட்டையும் சேர்த்து அப்பல்கலைக்கழக மாணவியின் பெற்றோருக்கு Chen Po-yen வழங்க வேண்டும்.
32 வயது Chen குற்றவாளியே என கடந்த ஜனவரியில் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், ஜூன் மாதம் தைவானிய உயர் நீதிமன்றமும் அதனை நிலைநிறுத்தியது.
2022 ஏப்ரலில் Instagram வாயிலாக அறிமுகமான இருவரும், அவ்வாண்டு அக்டோபர் முதல் காதலர்களாக மாறினர்.
எனினும், அடுத்த ஒரு வாரத்தில் Chai எனும் 24 வயது அப்பெண் கொலை செய்யப்பட்டார்.
தான் குடியிருந்த வாடகை வீட்டில் மூச்சுத் திணறி அவர் இறந்துகிடந்தார்.
அவரின் கழுத்து முறிந்திருந்தது சவப்பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
Chen, தன் கைகளாலேயே Chai-யின் கழுத்தை நெறித்துக் கொன்றதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
ஏற்கனவே கொடுத்தப் பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்ததால் Chai-யை கழுத்து நெறித்து கொன்றதை Chen-னும் ஒப்புக் கொண்டான்.