Latestமலேசியா

தொழிலாளர் சுரண்டலைத் தடுக்க நேப்பாளத்துடன் ஆட்சேர்ப்பு முறையை வலுப்படுத்த மலேசியா இணக்கம் – ரமணன்

புத்ராஜெயா, செப்டம்பர்-25,மலேசியா மற்றும் நேப்பாளத்திற்கு இடையிலான தொழிலாளர் தருவிப்பு முறையை மேலும் வலுப்படுத்தவும், தொழிலாளர் சுரண்டலைத் தடுக்கவும் இரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன.

​மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், நேப்பாளத்தின் இளைஞர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ராம்ஜீ யாதவுடன் (Ramjee Yadav) தொலைப்பேசி வாயிலாக நடத்திய கலந்துரையாடலில் இந்த முடிவு எட்டப்பட்டது.

​தொழிலாளர்கள் அதிகப்படியான ஆட்சேர்ப்புக் கட்டணங்களைச் செலுத்துவதைத் தடுக்கவும், இடைத்தரகர்களின் சுரண்டல்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கவும் வெளிப்படையான, முறையான வேலைவாய்ப்பு நடைமுறை அவசியம் என்பதை இரு அமைச்சர்களும் வலியுறுத்தினர்.

​தொழிலாளர் நிர்வகிப்பானது நாணயத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் தொழிலாளர் நலனை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதில் மலேசியா உறுதியாக இருப்பதாக ரமணன் தெரிவித்தார்.

​இதனிடையே, நேப்பாளத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடருக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர், அங்கு தொடர்புகொள்ள முடியாமல் உள்ள 55 மலேசியர்களைக் கண்டறிய அனைத்து தூதரக வழிமுறைகளும் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!