Latestமலேசியா

நடுவானில் துயரம்: 13 மணி நேரம் சடலத்துடன் பயணித்த பயணிகள்

லண்டன், மார்ச்-23-ஹோங் கோங்கிலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், 60 வயது பெண் பயணி புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் திடீரென உயிரிழந்தார்.

விமானத்தைத் திருப்ப வழி இல்லாத காரணத்தால், 13 மணி நேர பயணம் தொடர்ந்தது.

அவரது உடல் பின்புற ‘கேலரி’ பகுதியில் வைக்கப்பட்டது.

ஆனால் அங்கு தரை சூடாக இருந்ததால் துர்நாற்றம் பரவி பயணிகளும் விமானப் பணியாளர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாகினர்.

ஒருவழியாக லண்டனில் விமானம் தரையிறங்கியதும், போலீஸார் விசாரணை நடத்தினர்.

‘அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன’ என பிரிட்டிஷ் ஏர்வேஸும் தெரிவித்துள்ளது.

விமானப் பயணங்களில் மரணம் மிகவும் அரிதாகும்… மருத்துவ அவசர நேரங்களில் 0.3 விழுக்காடு மட்டுமே மரணத்தில் முடிவதாகக் கூறப்படுகிறது.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!