Latestமலேசியா

​நம்பிக்கை நாயகன்: விபத்தில் ஒரு கை மற்றும் ஒரு காலை இழந்த 32 வயது சீன இளைஞர், உடற்கட்டழகர் போட்டியில் அசத்தல்

பெய்ஜிங், மே-22-மாற்றுத்திறனாளியால் எதுவும் முடியும்” என்பதை நிரூபித்து, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானோருக்கு பெரும் உத்வேகமாக மாறியுள்ளார் 32 வயது சீன நாட்டு இளைஞர் Liu Xinju.

​10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு பயங்கர சாலை விபத்தில், அவர் தனது ஒரு கை மற்றும் ஒரு காலை இழந்தார்.

ஆரம்பத்தில் படுக்கையில் முடங்கிகிடந்து, சதா கைப்பேசியிலேயே விளையாடிக் கொண்டிருந்தார்.

இதனால் கவலையுற்ற பெற்றோர், அவரை உசுப்பேற்றும் விதமாக “நீ ஒன்றுக்கும் உதவாதவன்” எனக் கூறினர்.

இதனால் ‘வெகுண்டெழுந்த’ Liu, தனது மாற்றுத்திறனை ஒரு தடையாக நினைக்காமல் சாதிக்க முனைந்தார்.

ஒரு முன்னாள் ஓட்டக்காரருமான Liu உடற்பயிற்சி மையத்தில்,​மனம் தளராமல் தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, அண்மையில் நடந்த ஒரு பிரம்மாண்ட உடற்கட்டழகர் போட்டியில் சாதாரண வீரர்களுடன் மேடையில் சமமாக நின்று போட்டியிட்டார்.

​அவரது அசாத்தியமான தசைக்கட்டுகளையும், மன உறுதியையும் பார்த்த நடுவர்களும், பார்வையாளர்களும் எழுந்து நின்று தங்களின் பலத்த கைதட்டல்களால் அரங்கையே அதிரச் செய்தனர்.

​சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் Liu Xinju-வின் இந்தச் சாதனைப் பயணம், தடைகளைத் தாண்டி சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு வாழும் உதாரணமாக அமைந்துள்ளது…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!