Latestமலேசியா

இந்தியப் பெண் வீட்டுப் பணியாளர் கொலை வழக்கில் தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், அக்டோபர் 6 – இந்தியாவைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 31 வயது தொழிலதிபர் ஸ்டீவன்ட் அந்தோனி (Stevent Anthony) மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் காலை 10.55 மணிக்குள் தித்திவங்சா (Titiwangsa) பகுதியிலுள்ள வீட்டில் பணிப்பெண்ணை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒன்பது நாள் தடுப்புக் காவலுக்குப் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், தன் மீதான குற்றச்சாட்டைப் புரிந்துகொண்டதாக தலையசைத்தார். கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வருவதால், அவரிடம் குற்றத்தை ஒப்புக்கொள்கிறாரா என்ற கேள்வி எழுப்பப்படவில்லை.

குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் குறைந்தது 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம். அவருக்கு பிணை மறுக்கப்பட்டதுடன், பிரேதப் பரிசோதனை அறிக்கையைச் சமர்ப்பிக்க டிசம்பர் 16ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!